பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படம் இன்று உலகமெங்கிலும் சுமார் 2000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழகம் ஆந்திராவுக்கு இணையாக இந்தமுறை கேரளாவிலும் சூர்யாவின் 24 படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். அதோடு படத்திற்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுத்து படிப்படியாக தியேட்டர்களின் எண்ணிக்கையும் இன்னும் உயர்த்தும் வேலைகளும் நடக்கிறதாம்.
மேலும், சூர்யாவின் ரசிகர் மன்றங்களும் பேனர், கட்அவுட், தோரணங்கள் வைப்பதில் பெரிய ஆர்வம் காட்டி வரும் நிலையில், சென்னையிலுள்ள பிருந்தா தியேட்டரில் 24 படத்தில் சூர்யா நடிக்கும் 3 வேடங்களில் ஒன்றான ஆத்ரேயா கேரக்டரின் 80 அடி உயர கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதோடு இதற்கு முன்பு வெளியான சூர்யா படங்களை விடவும் இந்த படத்துக்கு அவரது ரசிகர்கள் தமிழகமெங்கிலும் பெரிய ஓப்பனிங் கொடுத்துள்ளனர். அந்த வகையில், விஜய், அஜித் படங்களுக்கான இணையாக சூர்யாவின் ரசிகர்கள் தியேட்டர்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் ஈடுபடப்போகிறார்களாம்.