வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
பாலிவுட் நடிகைகள் அவ்வப்போது ஆங்கில புத்தகங்களின் அட்டைப் படங்களுக்கு கவர்ச்சி போஸ் கொடுப்பது வழக்கமாக நடக்கும் விசயம்தான். அந்த வகையில், ஸ்ருதிஹாசன் சினிமாவில் என்ட்ரி ஆனதில் இருந்தே படங்களிலும் சரி, புத்தகங்களின் அட்டைப் படங்களிலும் சரி கவர்ச்சி உடைதரித்து அதிரடி போஸ் கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஸ்ருதிஹாசனும், ராதிகா ஆப்தேவும் ஆங்கில புத்தகங்களின் அட்டைப்படத்துக்கு போஸ் கொடுத்திருந்த கவர்ச்சி போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இப்போது அந்த ஆங்கில புத்தகத்துக்கு ஸ்ருதி போஸ் கொடுத்த மேலும் சில படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு போட்டோவில் சிங்கிள் பீஸ் பிகினி உடையணிந்து கவர்ச்சியாக ஒரு அதிரடி போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதி. இன்னும் பிரசுரிக்கப்படாத அந்த அட்டைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாம்.
சினிமாவில் தனது கவர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்புகள் கொடி பிடித்து வருவதால், தனது கவனத்தை புத்தகங்களின் அட்டைப்படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் ஸ்ருதிஹாசன், இப்படி போஸ் கொடுப்பதற்கு ஒரு படத்தில் நடிப்பது போன்று பெரிய சம்பளமும் வாங்குகிறாராம்.