ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகம் கோடிகளில் புரளும் திரையுலகமாக மாறி பல வருடங்களாகிவிட்டது. உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் இந்தியர்களால் இந்திப் படங்களுக்கும், தெலுங்கு, தமிழர்களால் தெலுங்கு, தமிழ்ப் படங்களுக்கும் சமீப காலமாக மிகப் பெரிய வசூல் வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக லட்சங்களில் வாங்கிக் கொண்டிருந்த நமது நடிகர்கள் கோடிகளில் வாங்க ஆரம்பித்தார்கள். 1, 10, 20, 50 கோடி சம்பளமாக வளர்ந்த அது விரைவில் 100 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியாவில் பணக்கார நடிகர்கள் யார் யார் என்பதை ஒரு ஆங்கில இணையதளம் பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி, நடிகர் ஷாரூக்கான 600 மில்லியன் டாலர் சொத்துக்களுடன் அதாவது, ரூ.3,979 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கடுத்து அமிதாப்பச்சன் ரூ.2,652 கோடிகளுடனும், சல்மான்கான் ரூ.1,326 கோடிகள், ஆமீர்கான் ரூ.1,193 கோடிகள், சைப் அலிகான் ரூ.928 கோடிகள், கமல்ஹாசன் ரூ.663 கோடிகள், தர்மேந்திரா ரூ.462 கோடிகள், அனுபம் கேர் ரூ.464 கோடிகள், அக்ஷய் குமார் ரூ.431 கோடிகள், இர்ஃபான் கான் ரூ.331 கோடிகள் பெற்றும் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் இடம் பெறாதததால் இந்தப் பட்டியல் செல்லாது என அவர்களது ரசிகர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 'விஸ்வரூபம்' வெளிவரவில்லை என்றால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொன்ன கமல்ஹாசன் எப்படி 663 கோடி ரூபாயையும் விட்டு வெளியேறுவார்...?.