ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவில் யு டியூப் இப்படி ஒரு ஹிட்ஸைப் பெறக் காரணமாக இருந்த 'கபாலி' பட டீசரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தனக்கு புகழைத் தேடிக் கொண்டுள்ளது யு டியூப். ரஜினிகாந்துக்கு 'டேக்' செய்யப்பட்டுள்ள அந்தப் பதிவில் “அறிமுகமே தேவையில்லாத மனிதர் உங்களை மின்னூட்ட மீண்டும் வந்துவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 1 கோடி ஹிட்ஸைக் கடந்த கபாலி டீசர் லைக்குகள் கணக்கிலும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை தெறி டீசர் மட்டுமே அதிக லைக்குகள் பெற்ற டீசராக இருந்தது. அந்த சாதனையையும் முறியடித்துள்ளது. அதோடு ஹிட்ஸ்களின் எண்ணிக்கையில் அடுத்த ஒரு சாதனையைப் படைக்க வேகமாக முன்னேறி வருகிறது. இதுவரை 'ஐ' டீசர் மட்டுமே அதிகப்படியான ஹிட்ஸ்களைப் பெற்ற டீசராக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்க கபாலி டீசருக்கு இன்னும் 10 லட்சம் ஹிட்ஸ்கள்தான் தேவை. அதன் படி 1 கோடியே 11 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்தால் 'கபாலி' டீசர்தான் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும்.