ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இலியானா தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகின்றார். அங்கும் போதிய படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இலியானாவிற்கு மீண்டும் டோலிவுட் ஆதரவு கரம் நீட்டியுள்ளது. இருப்பினும் தேடி வந்த தெலுங்கு படவாய்ப்பை இலியானா மறுத்து விட்டாராம்.
பாலகிருஷ்ணாவின் 100வது படம் கௌதமிபுத்ர சதர்கனி எனும் சரித்திர படம் என்பது அறிந்ததே. இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா மற்றும் அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. இருவரும் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லையாம்.
இந்நிலையில் இலியானாவை இப்படத்தில் நாயகியாக நடிக்க இயக்குனர் க்ரிஷ் கேட்டுள்ளார். ராணி வேடத்திற்கு தனது உடல்தோற்றம் சரிபட்டுவராது என்று கூறி, பாலகிருஷ்ணாவிடம் இணைந்து நடிக்க இலியானா மறுத்துவிட்டாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மே 9 முதல் துவங்கவுள்ளது. பாஜிரோ மஸ்தானி படத்திற்கு கிராபிக்ஸ் பணியாற்றிய குழுவினர் இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளனர்