வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சர்வதேச அளவில் நடக்கும் திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழாவும். இதில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்து திரைநட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள். இந்தியா சார்பிலும் ஐஸ்வர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற இருக்கும் திரைப்பட விழாவில் நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொள்கிறார். அவர் நடித்துள்ள 'தி லாஸ்ட் டாம்ப்' என்ற படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது. இதற்காக மல்லிகாவும் பங்கேற்க உள்ளார், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து மல்லிகா கூறியிருப்பதாவது... ''நான் நடித்துள்ள 'தி லாஸ்ட் டாம்ப்' என்ற படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளேன். ஹாங்காங் இயக்குநர் டேனியல் லீ இப்படத்தை இயக்கியுள்ளார். சீனாவில் மைனஸ் டிகிரி குளிரில் இப்படத்திற்காக நடித்தேன். இதற்கு முன்னர் நான் நடித்திராத ஒருவேடத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.