வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
ரஜினிகாந்துடன் ஒரு நடிகை நாயகியாக நடிக்கிறார் என்றால் அவருக்கென தனி இமேஜ் உருவாகும். அதன் பின் அவர் தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறிவிடுவார். 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஒரு திறமையான நடிகை. அதே சமயம் மிகவும் துணிச்சலான நடிகையும் கூட. ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும் பிரபல ஆங்கில இதழ் ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சிகரமான போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்த மாத இதழின் அட்டைப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் அந்தப் புகைப்படம் இணையத்தைக் கலக்கப் போவது உறுதி.
ரஜினிகாந்தின் நண்பரும் நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் மற்றுமொரு பிரபல ஆங்கில இதழ் ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சிகரமான போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். சிகப்பு நிற உடையில் அசத்தலாக கவர்ச்சியாக இருக்கும் இந்தப் புகைப்படமும் திரையுலகில் உள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரே மாதத்தில் இரு பெரும் தமிழ் நட்சத்திரங்களின் படங்களிலும், குடும்பத்திலும் இருக்கும் ராதிகா ஆப்தே, ஸ்ருதிஹாசன் இருவரின் இந்த அட்டைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.