ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு சினிமா நட்சத்திரங்களின் கைக்குள் வந்தது சமீபகாலங்களில் தான். அதற்கு முன்பெல்லாம் தங்களை பற்றிய, தங்களது படங்களை பற்றிய விபரங்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த அவர்கள் நம்பியிருந்தது வெப்சைட் என்று சொல்லப்படுகிற வலைதளத்தைத்தான். அனைத்து நடிகர்களும் இதனை பயன்படுத்தவில்லை என்றாலும் முன்னணி நடிகர்களுக்கு இப்படி வலைத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அவர்களது ரசிகர்களால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் மோகன்லாலுக்காக 'தி கம்ப்ளீட் ஆக்டர்.காம்' என்கிற வலைத்தளம் இயங்கி வருகிறது. இதில் அவ்வப்போது மோகன்லால் தனது கருத்துக்களை எழுதியும் வருகிறார். அந்த வகையில் இப்போது பேஸ்புக்கில் கிட்டத்தட்ட 41 லட்சம் பேர் மலையாள இளம் முன்னணி நடிகாறன துல்கர் சல்மானையும் பின் தொடர்கின்றனர். இருந்தாலும் அதுமட்டுமே தனது ரசிகர்களுக்கு தனது படங்களை பற்றிய தகவல்களை தர போதுமானது அல்ல என நினைக்கும் துல்கர் சல்மான், வரும் ஜூலை-28ல் தனக்கென அதிகாரப்பூர்வ வலைதளத்தை ஆரம்பிக்க இருக்கிறார். இதற்கான வடிவமைப்பு பணிகள் நடைபெறு வருகின்றன.