'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, பிரகாஷ் ராஜ் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் - 'கோ'. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், புதுமுக இயக்குநர் சரத் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கிறது. கோ படத்தைத் தயாரித்த அதே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த பொலிட்டிகல் த்ரில்லருக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் கடந்த 20 வருடங்களாக மானேஜராகப் பணியாற்றி வரும் நோயல் ஜேம்ஸின் மகன். 'கோ 2' படத்தை மே 13 ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். தமிழக சட்டசபைத்தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக 'கோ2' படத்தை வெளியிட்டாக வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பு உறுதியாக இருந்தது. காரணம், இப்படம் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதுதான்.
இதில் இன்னொரு ஒற்றுமை என்ன தெரியுமா? முதல் பாகமான 'கோ' படம், 5 வருடங்களுக்கு முன்பு நடந்த தமிழகத் தேர்தலுக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அதன் 2ஆம் பாகம் மிகச் சரியாக தேர்தலுக்கு 3 நாட்கள் முன்னதாக வெளியாகிறது. அதாவது மே 13 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு புதிய ஆட்சி அமைந்த பிறகு கோ-2 படத்தை வெளியிட்டால் சிக்கல் வரும் என்பதாலோ என்னவோ படத்தை தேர்தலுக்கு முன்பாகவே தொடங்குகின்றனர்.