பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்த வருடம் மே 1 ஆம் தேதி அன்று ரஜினியின் 'கபாலி' டீஸர் வெளியானதால், வழக்கமாக மே 1 அன்று அமர்க்களப்படும் அஜித்தின் பிறந்தநாள் ஆரவாரம் கூட அமுங்கிப்போனது. மே 1 அன்று வருடா வருடம் டுவிட்டரில் அஜித்தின் பிறந்தநாள் டிரெண்டிங்கில் இருக்கும். இந்த வருடமோ,
#KabaliTeaser
#Magizhchi
#kabalida
#KabaliTamilMovie
#Thalaivar
#padhmavibhusan
#neruppuda
#மகிழ்ச்சி
என முழுக்க முழுக்க கபாலி படத்தின் டீஸர் குறித்த ஹேஸ்டேக்குகளே டிரெண்டிங்கில் அதிகளவில் இடம்பிடித்திருந்தன.
கபாலி டீஸர் வெளியீட்டில் அஜித் பிறந்தநாளே அமுங்கிப்போய்விட்டபோது, சிம்பு எல்லாம் எம்மாத்திரம்? அஜித் ரசிகர்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பவுதற்காக தன்னை அஜித் ரசிகராக காட்டிக்கொள்கிறவர் சிம்பு. அஜித்தின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது புதிய படத்தின் டைட்டிலை அறிவிக்கவிருப்பதாக ட்விட்டரில் அறிவித்த சிம்பு, படத்தின் பெயர் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்று ட்விட்டர் மூலம் அறிவிப்பு செய்தார். அய்யோ.. பாவம்... கபாலி பரபரப்பில் சிம்புவின் புதிய படம் அமுங்கி போனது.