ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாலு படத்தை அடுத்து சிம்பு நடிக்க கமிட்டான படம் இது நம்ம ஆளு. பசங்க பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வல்லவனுக்குப்பிறகு மீண்டும் நயன்தாரா சிம்புவுடன் டூயட் பாடியிருக்கிறார். கூடவே ஆண்ட்ரியாவும் நடித்துள்ளார். சிம்புவின் தந்தை டி.ஆர். தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஆரம்பத்தில் நல்லவிதமாக தொடங்கிய இந்த படத்துக்கு பின்னர் அவ்வப்போது பைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் டென்சனான டைரக்டர் பாண்டிராஜ், தன்னால் இந்த ஒரு படத்துக்காக மாதக்கணக்கில் காத்திருக்க முடியாது என்று பசங்க-2, கதகளி ஆகிய படங்களையும் இயக்கினார். ஆனால் அந்த படங்கள் எப்போதோ வெளியான பிறகும் இன்னும் இது நம்ம ஆளு திரைக்கு வரவில்லை.
கடந்த ஒரு மாதமாக இது நம்ம ஆளு படம் இப்பவரும் அப்பவரும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் படம் வந்தபாடு இல்லை. இந்நிலையில் சமீபத்தில்இந்தப்படம் சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.அதில் இந்தப்படத்திற்கு ‛‛யு''சான்றிதழ் கிடைத்தது. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இது நம்ம ஆளு படம் மே 20துஆம் தேதி வரும் என அறிவிக்கபட்டுள்ளது. இது குறித்து பாண்டிராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது.. ‛‛இது நம்ம ஆளு படத்திற்காக காத்திருந்தது போதும், சத்தியமா இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு'' என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் படம் மே 20ம் தேதி வெளியாகும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.