ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யு டியூப் வீடியோ இணைய தளம் கூட தன்னுடைய வீடியோ வரலாற்றில் இப்படி ஒரு ஹிட்ஸைக் கண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தியத் திரையுலகில் பொதுவாகவே பல நூறு கோடிகளை கடக்கும் ஹிந்தித் திரையுலகத்தை விட, தென்னிந்தியாவில் பெரிய திரையுலகமான ஹிந்தித் திரையுலகத்தை விட, தமிழ்த் திரையுலகத்தில் இந்த டீசர், டிரைலர்கள் ஏற்படுத்தும் சாதனை மகத்தானதாகவே உள்ளது. நேற்று காலை 11 மணிக்கு யு டியூப்பில் வெளியான கபாலி டீசர் 24 மணி நேரத்திற்குள் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது.
24 மணி நேரத்திற்குள் அதிகப்படியான ஹிட்ஸ்கள், அதிகப்படியான லைக்குகள் என இந்தியத் திரையுலகத்திலேயே ஒரு பெரிய சாதனை படைத்த டீசராக அமைந்துவிட்டது. 24 மணி நேரத்திற்குள்ளாக 50 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்தும், 2,30,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. ஒரு நிமிட டீசருக்கே இப்படி ஒரு சாதனை என்றால் அடுத்து டிரைலர் வந்தால் என்ன நடக்கும் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித், விஜய் படங்களின் டீசர்தான் சாதனை படைக்கும் என கடந்த சில படங்களாக அவரவர் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொண்டு வந்தனர். ஆனால், ரஜினிகாந்தின் ரசிகர்கள் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். இருந்தும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அஜித், விஜய் ரசிகர்கள் யு டியூபில் கபாலி டீசர் பற்றி நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைக் கொடுத்தனர்.
அவர்களை ரஜினி ரசிகர்கள் சின்னப் பசங்கள்லாம் தூரப் போய் விளையாடுங்கப்பா என பதிலுக்கு நக்கலடித்துக் கொண்டிருந்தனர்.