Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனிதனில் ஹாரிஸ், சந்தானம் இல்லாது ஏன்.? - உதயநிதி

02 மே, 2016 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Udhayanidhi-replied-why-Harris,-Santhanam-not-part-in-Manithan-movie

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்தபோது சந்தானத்தை முழுமையாக நம்பித்தான் களமிறங்கினார் உதயநிதி. அதேபோல், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தனக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் நம்பினார். அந்த வகையில், அவரது நம்பிக்கை வீண்போகாத அளவுக்கு ஹாரிஸ்ஜெயராஜ், சந்தானம் இணைந்த உதயநிதி படங்கள் அவருக்கு கைகொடுத்தன. அதனால் எனது ஒவ்வொரு படங்களிலுமே ஹாரிஸ் ஜெயராஜ் இருப்பார். அதேபோல் சந்தானமும் இருப்பார் என்று பல மேடைகளில் கூறி வந்தார் உதயநிதி.


ஆனால், இப்போது அவர்கள் இருவருமே அவரது மனிதன் படத்தில் இல்லை. இதுபற்றி உதயநிதி கூறுகையில், ஆரம்பத்தில் அவர்கள் இருவருமே எனது படங்களுக்கு பெரிய பலமாக இருந்தார்கள். அதேசமயம் தொடர்ந்து அவர்களை என் படங்களில் பயன்படுத்துவதால் ஒரு முத்திரை விழுந்து விடும். உதயநிதி படமா? அட இவர்கள்தான் இருப்பார்கள் என்றாகி விடும். அதனால்தான் மனிதன் படத்தில் சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்தேன். காமெடிய னாக விவேக் நடித்தார்.


மேலும், படத்துக்குப்படம் புதுப்புது கலைஞர்களுடன் நடிப்பது எனக்கும் ஒரு புதுமையான அனுபவமாக உள்ளது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புது விசயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. இது என் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதனால்தான் இனிமேல் படத்துக்குப்படம் புதுப்புது நடிகர் நடிகைகள், டெக்னீசியன்களுடன் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்கிறார் உதயநிதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in