இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்திற்கான வேலைகள் கடந்த வாரம் துவங்கப்பட்டது. இது அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இது வெறும் வதந்தி எனவும், பவன் கல்யாண் நடிக்க உள்ளது அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக் என கூறப்பட்டது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள படக்குழுவினர், இது வீரம் படத்தின் ரீமேக் என உறுதி செய்துள்ளனர்.
வேதாளம் படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்தினம், அதன் ரீமேக்கில் நடிப்பதற்கு பவன் கல்யாணை அணுகி உள்ளார். பவனும் மிகுந்த ஆர்வத்துடன் உடனே ஓகே சொல்லி உள்ளார். அதே சமயம், டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவும், வீரம் படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு பவனிடம் கேட்டுள்ளார். பவன் கல்யாணின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், அஜித் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை நடிக்க வைத்தால் தமிழை போலவே தெலுங்கிலும் இவ்விரு படங்களும் ஹிட் ஆகும் என ஏ.எம்.ரத்தினமும், எஸ்.ஜே.சூர்யாவும் நினைத்துள்ளார்களாம்.
வீரம் படத்தின் ரீமேக் வேலைகள் அடுத்த மாதம் துவங்க உள்ளதாகவும், இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு அனுப் ரூபன்ஸ் இசையமைத்து வருகிறார். இவர், ஏற்கனவே இப்படத்திற்கான 4 பாடல்களை இசையமைத்து முடித்து விட்டாராம்.