ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
படுபிஸியான படப்பிடிப்பற்கு நடுவிலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் வேலைகளையும் கவனித்து வருகிறார் நடிகர் விஷால். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக நடிகரும் நடிகர் சங்க உறுப்பினருமான டிபி கணேஷன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த விஷால், டிபி கணேஷன் குடும்பத்துக்கு ரூ 25 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளார். கணேஷன், உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போதிய பண வசதி இல்லாததால் சிகிச்சையைத் தொடர முடியாத நிலையில் சமீபத்தில் உயிர் இழந்தார். இதனை அறிந்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் உடனடியாக உதவினார். அவர் நடத்தி வரும் தேவி அறகட்டளை மூலம் ரு.25000 கணேஷன் குடும்பத்திற்கு நிதியாக கொடுத்துள்ளார்.கணேஷனின் மனைவியிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் அதற்கான காசோலையை வழங்கி உள்ளனர். மேலும் கணேஷனின் குடும்பத்திற்கு மாதம் தோறும் குடும்ப ஓய்வூதியமாக ரு.2500 வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் விஷால்