ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் அஜித் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1993 ம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் அஜித். தொடர்ந்து 1995ம் ஆண்டு அவர் நடித்த ஆசை படம், தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தை உருவாக்கியது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அஜித்திற்கு, 1999ம் ஆண்டு அமர்களம் படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து 2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் சமீபத்தில் தங்களின் 14வது திருமண நாளை கொண்டாடினர்.
இந்நிலையில் இன்று, பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அருகே உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்று அஜித் சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் அவர் பாலக்காடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்திற்கான சூட்டிங் ஜூன் 2ம் தேதி துவங்க உள்ளது. இப்படத்தை டைரக்டர் சிவா இயக்க உள்ளதாகவும், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாராவும், தமன்னாவும் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.