இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இன்றைய இளம் நடிகர்களில் விஜய்யும், அஜித்தும் அதிகம் பேசப்பட்டாலும் பெண்கள் மத்தியிலும், ரசிகைகள் மத்தியிலும் சூர்யாவுக்கென தனி இடம் உண்டு. அதற்கு அவரது குடும்பப் பின்னணியும் ஒரு காரணம். அவருடைய அப்பா சிவகுமார் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை பெண்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் கூட ஒரு நல்ல பெயருடன் இருக்கிறார். அப்பா வழியில் மகன் சூர்யாவும் நடப்பதால் அவருக்கும் சக நடிகர்களிடமும், நடிகைகளிடமும் நல்ல பெயர் உண்டு.
அந்த விதத்தில் சூர்யாவுடன் '24' படத்தில் முதல் முறையா ஜோடி சேர்ந்துள்ள நித்யா மேனன், சூர்யாவைப் பாராட்டித் தள்ளியுள்ளார். “சூர்யாவைப் பற்றி நெகட்டிவ்வாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. சில நடிகர்களுடன் நடிக்கும் போது கடினமாக இருக்கும். ஆனால், சூர்யாவுடன் நடிக்கும் போது மிகவும் எளிதாக இருந்தது. அவர் எப்போதுமே ஒரு ஜென்டில்மேன், மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்,” என புகழ்ந்து தள்ளுகிறார். இத்தனைக்கும் '24' படத்தில் குறுகிய நாட்கள் மட்டுமே சூர்யாவுடன் நடித்துள்ளார் நித்யா மேனன்.
பெண்கள் விரும்பும் நாயகர்களில் மட்டுமல்லாது நாயகிகள் விரும்பும் நாயகர்களிலும் சூர்யாதான் முதலிடத்தில் இருக்கிறார் என்கிறார்கள், நிஜமாகவா....