'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
2016ம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று “மனிதன், களம், சாலையோரம், கண்டேன் காதல் கொண்டேன்,” ஆகிய நான்கு தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. கடந்த சில வாரங்களாகவே ஒரு பெரிய திரைப்படமும் மற்ற சிறிய திரைப்படங்களும் என்ற ரீதியில்தான் படங்களின் வெளியீடு அமைந்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடித்துள்ள 'மனிதன்' படத்திற்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தைப் பார்த்த விமர்சகர்கள் படத்தைப் பற்றி பாராட்டிதான் எழுதி வருகிறார்கள். இதுவரை விளையாட்டுத்தனமான கதாபாத்திரங்களிலேயே கவனம் செலுத்திய உதயநிதி முதன் முறையாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அனைவருமே பாராட்டுகிறார்கள். ஏ சென்டர்களில் படத்திற்கு நல்ல வரவேற்பும், பி மற்றும் சி சென்டர்களில் குறிப்பிடத்தக்க வரவேற்பும் இருப்பதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமான மசாலாப் படமாக இல்லாமல், குறைந்த பட்ஜெட்டில் படமாக்கப்பட்டிருப்பதாலும் இப்படம் லாபத்தைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'களம்' படத்தை படமாக்கிய விதத்தில் பாராட்டும்படி கொடுத்துள்ளவர்கள், ஒவ்வொரு காட்சியையும் நீள நீளமாக அமைத்து திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்திவிட்டார்கள் என்ற விமர்சனமே அதிகம் வந்துள்ளது. பார்த்து சலித்துப் போன பேய்க் கதை என்பது படத்திற்கு மிகப் பெரும் மைனஸ் பாயின்ட்.
மற்ற இரண்டு படங்களும் நாளை வரை தாக்குப் பிடித்தால் அதுவே அந்தப் படங்களுக்குப் பெரிய வெற்றி என்கிறார்கள்.