Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் மார்க்கெட்டைப் பிடிக்க முடியாத விஜய்

29 ஏப், 2016 - 22:12 IST
எழுத்தின் அளவு:
Vijay-still-didnt-catch-Telugu-Market

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசனை விட அதிக வியாபரத்தையும், ரசிகர்களையும் பெற்றுள்ளவர் விஜய். கர்நாடகாவில் அனைத்து தமிழ் நடிகர்களையும் ஒரே அளவில்தான் பார்ப்பார்கள். ஆனால், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் விஜய்யால் இன்னும் சரியான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. 'தெறி' படத்தின் மூலமாகவாவது தெலுங்குத் திரையுலகில் காலூன்ற நினைத்த விஜய்யை இந்த முறையும் ஏமாற்றிவிட்டார்கள் தெலுங்கு ரசிகர்கள்.


'தெறி' படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் மிகப் பெரும் தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜுதான் வெளியிட்டார். ஆனால், ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர படத்தை மீடியாவிடமே சரியாகக் கொண்டு போய்ய் சேர்க்கவில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தெலுங்கில் 'தெறி' படம் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியாமல் போய்விட்டது.


விஜய்யை விட ஜுனியர்களான சூர்யா, கார்த்தி இருவருக்கும் கூட தெலுங்கில் ஒரு பெயரும், ரசிகர்கள் கூட்டமும் வந்துவிட்டது. ஆனால், தன்னுடைய தமிழ்ப் படத்தையே பாதி தெலுங்குப் படம் போல மசாலாப் படமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய்க்கு அங்கு இன்னும் பெரிய அளவில் மார்க்கெட் ஓபன் ஆகாமல் இருக்கிறது.


'தெறி' தெலுங்கு வியாபாரத்தைப் பார்த்து நொந்து போன தயாரிப்பாளர் தாணு, 'கபாலி' படத்தை நேரடியாகவே வெளியிட யோசித்து வருகிறாராம். ரஜினிக்குத் தெலுங்குத் திரையுலகில் தனி வரவேற்பு இருப்பதாலும், 'கபாலி' படம் ஆக்ஷன் படம் என்பதாலும் இப்போதே படத்தை வாங்க பலரும் முன் வருகிறார்களாம். ஆனால், தெலுங்கு 'தெறி' அனுபவத்தால் யோசித்தே முடிவு செய்யப் போவதாக தாணு தெரிவிப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் பிரச்சனையிலும், தெலுங்கில் 'தெறி' சரியாகப் போகாததாலும் சுமார் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in