ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய சூழலில் தமிழ்சினிமா வியாபாரத்தில் யு சான்றிதழ் பெற்ற படங்களுக்குத்தான் மதிப்பு. காரணம் எந்தவொரு திரைப்படத்துக்கும் தமிழக அரசின் வரிவிலக்குக் கிடைக்க வேண்டுமானால் அந்தப் படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எதிர்க்கட்சி குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி போன்றவர்களுக்கு யு சான்றிதழ் கிடைத்தாலும் வரிவிலக்கு கிடைக்காது என்பது ஒரு பக்கம் இருக்க, சூர்யா குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களுக்கு 'யு' சான்றிதழும், வரிவிலக்கும் கிடைக்க இதுவரை எவ்வித தடையும் ஏற்பட்டதில்லை.
சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்த முதல் இரண்டு படங்களான 36 வயதினிலே, பசங்க 2 படங்களுக்கு சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்ததோடு, தமிழஅரசின் வரிச்சலுகையையும் கிடைத்தது. 36 வயதினிலே, பசங்க 2 படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு 24. விக்ரம்குமார் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் இந்த அறிவியல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் இது.
24 படம் நேற்று சென்சாருக்குச் சென்றது. 24 படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அனைத்து வயது ரசிகர்களும் பார்ப்பதற்கு ஏதுவாக 24 படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்ததை அடுத்து 2டி எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் தயாரித்த மூன்று படங்களுக்கும் சென்சாரில் யு சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.