இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி - பி.வாசு கூட்டணியில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த சந்திரமுகி படம் வசூலில் புதிய சாதனை படைத்தது. ஆனால் அதன்பின்னர் அவர்கள் இணைந்த குசேலன் படம் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய படம் சிவலிங்கா. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக வேதிகா நடித்திருந்தார். த்ரில்லர் படமாக வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக பி.வாசுவுக்கு அமந்தது.
பி.வாசு இந்தப்படத்தை தமிழில் ரஜினியை வைத்து இயக்கப்போவதாக தகவல் வெளியானது, ஆனால் அவர் நடிக்கவில்லை. அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த், இந்தப்படத்தில் அஜித் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும், ஏனென்றால் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்று அஜித்திற்கு சிபாரிசு செய்ததாக ஒரு தகவல் வெளியானது.
இதுப்பற்றி விசாரித்ததில், இப்படம் தொடர்பாக பி.வாசு யாரையும் சந்திக்கவில்லையாம், மேலும் ரஜினி, அஜித்திற்கும் சிபாரிசு செய்யவில்லையாம். இப்போதைக்கு லைக்கா நிறுவனத்திடம் மட்டும் பேசியிருப்பதாகவும், தமிழில் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பது மட்டும் முடிவாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.