பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹாலிவுட் படம் உட்பட தற்போது ஐந்து படங்களில் நடிக்க இருக்கிறார் நடிகர் தனுஷ். 'தங்கமகன்' படத்திற்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் தொடரி. ரயிலில் உணவு சப்ளை செய்பவராக 'பூச்சியப்பன்' என்ற கேரக்டரில் இப்படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். பிரபல நடிகையின் 'டச்அப்' பெண்ணாக சரோஜா என்ற கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
ரயில் பயணத்தில் இருவருக்கும் இடையே உருவாகும் காதலைப் பற்றிய படம் இது. எனவே, முழுக்க முழுக்க ரயில் பயணத்திலேயே இப்படத்தை படமாக்கியுள்ளார் பிரபுசாலமன். எனவேதான் படத்திற்கு 'தொடரி' (ரயில்) என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். 'தொடரி' படத்திற்காக சமீபத்தில் தொடர்ச்சியாக 10 மணி நேரம் டப்பிங் பேசி கொடுத்திருக்கிறார். ஒரே மூச்சில் தன்னுடைய டப்பிங் முழுவதையும் முடித்துக் கொடுத்து படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தனுஷ்.
இந்நிலையில், 'தொடரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை மே 2ஆவது வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். தற்போது டீஸரை உருவாக்கும் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவாம். டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தொடரி' பாடல்கள் மே மாத இறுதியில் வெளியாக உள்ளது.