தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெக்கரை இயக்கிய இரண்டெழுத்து இயக்குனரின் அடுத்த படத்தில் பிரகாச இசைதான் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நடிக்க இன்னொரு முன்னணி ஹீரோ தேவைப்படுகிறார். இதற்காக இயக்குனர் சில முன்னணி ஹீரோக்களை அணுகினாராம். உங்க கதை சூப்பராக இருக்கு நீங்க சொல்ற கேரக்டர்ல நடிக்கிறேன். ஆனால் பிரகாச இசைக்கு பதிலா வேற யாரையாவது நடிக்க வையுங்கன்னு சொல்றாங்களாம். தேனை ஆண்ட தயரிப்பு நிறுவனமோ பிரகாச இசையை விலக்கவும் முடியாமல், முன்னணி ஹீரோக்களை புக் பண்ணவும் முடியாமல் தவிக்கிறதாம். சோலோவா வளர்ந்து வரும் பிரகாச இசை மீது மற்ற ஹீரோக்கள் கடுப்பில் இருப்பதே இந்த மறுப்புக்கு காரணமாம்.