சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா மற்றும் பலர் நடித்த 'தோழா' திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கில் வெளியாக இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரெஞ்சு மொழிப் படத்தின் ரீமேக்காக உருவான இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் வாங்கியிருக்கிறார். உடனடியாக படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
நாகார்ஜுனா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். கார்த்தி கதாபாத்திரத்தில் இளம் நடிகர் வருண் தாவனை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம். இருவரிடமும் இது சம்பந்தமான பேச்சு வார்த்தை ஆரம்பித்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் எந்த அளவிற்கு கமர்ஷியல் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு சிறந்த கதையம்சம் கொண்ட படங்களுக்கும் வரவேற்பு இருக்கிறது. பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா கதாபாத்திரத்தில் நடித்தால் அது இன்னமும் சிறப்பாகவே இருக்கும்.