இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் மிகவும் அழகான ஹேண்ட்சம் ஹீரோ அரவிந்த்சாமி. மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி, அவரது இயக்கத்தில் தளபதி, ரோஜா, பம்பாய், உயிரே, கடல் என பல படங்களில் நடித்துவிட்டார். மணிரத்னம் தவிர்த்து பல இயக்குநர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். தன்னுடைய பிசினஸ் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி, கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். அதன்பிறகு அவர் நடித்த தனிஒருவன் படம் அரவிந்த்சாமியை மீண்டும் பிரபலமாக்கிவிட்டது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அரவிந்த்சாமி சின்னத்திரைக்கு வர இருக்கிறார். விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை, அரவிந்த் சாமி தொகுத்து வழங்கப்போவதாக கூறப்படுகிறது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன்-1-ஐ நடிகர் சூர்யா நடத்தினார். அதன்பின்னர் பிரகாஷ்ராஜ் நடத்தினார். இந்நிலையில் இப்போது இதன் மூன்றாம் பாகத்தை அரவிந்த்சாமி தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.