இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை ராணி முகர்ஜிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு ராணி, சில கிலோக்கள் உடல் எடை கூடி உள்ளார்.
பிரசவத்திற்கு பிறகு வெளியில் தலைகாட்டாமல் இருந்த ராணி முகர்ஜி, சமீபத்தில் டைரக்டர் கரன் ஜோகரின் தாயார் ஹிரோ ஜோகரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பிரசவத்திற்கு பிறகு முதல்முறையாக மீடியாக்கள் முன் தோன்றிய ராணி முகர்ஜி, அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருந்தார்.
ஆனால், குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகி விட்டதால் தற்போது, பிரசவத்தால் கூடிய எடையை குறைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளாராம் ராணி. நடிகை ஐஸ்வர்யா ராயும் குழந்தை பிறந்த போது இதே போல் தான் குண்டாகி இருந்தார். அப்போது ஐஸ்வர்யா குண்டாகி விட்டதால் இனி படங்களில் நடிக்க மாட்டார். அப்படி நடித்தாலும் அவருக்கு ரசிகர்களிடம் முன்பு போல் மவுசு இருக்காது என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தது.
இவை அனைத்தையும் முறியடிக்கும் விதமாக ஐஸ்வர்யா மீண்டும் தனது பழைய ஸ்லிம் உடல்வாகுக்கு மாறி, பல படங்களில் நடித்து வருகிறார். இதே போல் ராணி முகர்ஜியும் எடையை குறைத்து, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என கூறப்படுகிறது.