‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
2012ம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கஹானி'. சுஜாய் கோஷ் இயக்கத்தில், கர்ப்பிணி பெண்ணாக வித்யாபாலன் நடித்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் முக்கியமான ரோலில் நடிகர் அர்ஜூன் ராம்பால் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் சுஜாய், அர்ஜூனிடம் பேசினார். ஆரம்பத்தில் மறுத்தவர், கெஸ்ட் ரோலில் மட்டும் தான் நடிப்பதாக சொன்னார். பின்னர் கதையின் தன்மையை புரிந்து கொண்ட அர்ஜூன், இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். 'கஹானி' படத்தின் முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று மும்முரமாய் இருக்கிறார்கள் இயக்குநரும், வித்யாபாலனும். தற்போது கஹானி-2 கதை தொடர்பான வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் அடுத்தாண்டு, மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது.