ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கானுக்கு இன்று(மார்ச் 14ம் தேதி) பிறந்தநாள். இன்று தனது 51வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். அமீர்கான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்திற்கே முதலிடம் கொடுப்பாராம். இதுகுறித்து அமீரின் மனைவி கிரண் ராவ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''அமீர் ஒரு நடிகனாக இருப்பதால் சாதாரண தந்தை போன்று அவரால் தினமும் இருக்க முடியாது. ஏனென்றால் படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சென்று வருவார். அந்த சமயம் அவரால் குடும்பத்துடன் செலவிட முடியாது. ஆனால் அதே அமீர்கான் லோக்கலில்(மும்பை) இருந்தார் என்றால் குடும்பத்திற்கே எப்போதும் முதலிடம் கொடுப்பார். குறிப்பாக மகன் ஆசாத்துடன் அதிகநேரம் செலவிடுவார். விளையாட்டு உள்ளிட்ட பல விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். அவருக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குடும்பத்திற்கே முதலிடம் கொடுப்பார். அமீர்கான் ஒரு சிறந்த அப்பாவாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.