ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா. இந்தி சினிமாவின் டாப் 5 நடிகைகளில் ஒருவராக இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணியின் உரிமையாளரும் கூட. பிரீத்தி ஜிந்தா, அமெரிக்காவை சேர்ந்த ஜெனிகுட் என்பவரை காதலித்தார். இவர்கள் காதல் செய்திகள் பரபரப்பாக வெளிவந்தபோது அதனை மறுத்தார் பிரீத்தி.
இந்நிலையில் பிரீத்தி ஜிந்தாவுக்கும், ஜெனிகுட்டிற்கும் அமெரிக்காவில் திருமணம் நடந்துள்ளது. ரகசியமாக நடந்த இந்த திருமணம் பற்றி ப்ரீத்தி ஜிந்தா வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் அவரின் நண்பர் கபீர் பேடி, இந்த திருமணம் நடந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
இதனிடையே ப்ரீத்தி ஜிந்தாவின் திருமண வரவேற்பு, ஏப்ரல் மாதம் மும்பையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமண வரவேற்பில் சல்மான்கான், ஷாரூக்கான், அமீர்கான், அக்ஷ்ய் குமார், ஹிருத்திக் ரோஷன், அபிஷேக்பச்சன், பாபி தியோல் உள்ளிட்ட பாலிவுட்டின் அநேக திரை பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.