ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்று காதலர் தினத்தையட்டி இசை அமைப்பாளர் அனிருத் அவளுக்கென என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். இதனை நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இதேபோல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா "ன் பகல் கனவா...." என தொடங்கும் காதல் பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் கிருஷ்ணா, ஸ்வாதி நடிக்கும் யாக்கை என்ற படத்தில் இடம்பெறுகிறது. இந்தப் படத்தை குழந்தை வேலப்பன் இயக்கி உள்ளார். சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதியுள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. விரைவில் வெளிவர இருக்கிறது. பாடல் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக காதலர் தினத்தையட்டி இந்த காதல் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். "நீ என் பகல் கனவா..." என்று தொடங்கும் இந்தப் பாடல் காதலின் பிரிவை சொல்கிறது. யுவன் பாடியுள்ளார். யுவன் தனது ரிக்கார்டிங் அறை மற்றும் கடற்கரை, காடு, மலைகளில் பாடித் திரியும் காட்சிகளுடன், படத்தின் காதல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.