கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
அனுஷ்கா சர்மா - விராத் கோஹ்லி இடையே பல விஷயங்களில் ஒத்துப்போகாததால் அவர்கள் பிரிந்து விட முடிவு செய்து விட்டதாக ஏற்கனவே கூறி இருந்தோம். ஆனால், தற்போது அவர்கள் பிரிந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது. சுல்தான் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அனுஷ்கா சர்மா, விராத்திடம் கூறினாராம். ஆனால், அனுஷ்காவின் விருப்பத்திற்கு விராத் மறுப்பு சொல்லி விட்டாராம். மேலும், நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொள்ளும்படி அனுஷ்காவிடம் கூறிய விராத், திருமணம் செய்து கொள்வது குறித்தும் விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஆனால் சல்மானுடன் நடிக்க விராத் மறுத்ததால் விரக்தியடைந்த அனுஷ்கா, விராத்தை விட்டு பிரிய முடிவு செய்தாராம். ஆக விராத்-அனுஷ்கா பிரிவிற்கு அடிப்படை காரணமாக இருப்பவர் சல்மான் தான் என கூறப்படுகிறது.