ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் - இது நம்ம ஆளு.
குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் தயாரிக்க, முதல் பிரதி அடிப்படையில் லைன் புரட்யூசராக தயாரித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்து வரும் இது நம்ம ஆளு படத்தை எப்படியாவது மார்ச் மாதம் வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறார் டி.ராஜேந்தர்.
இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தின்பேரில் பைனான்ஸ் கொடுத்த வெண்கோவிந்தா என்பவர் இது நம்ம ஆளு படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்குப்போட்டிருக்கிறார்.
அந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வருமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.
இன்னொரு பக்கம், வாலு படத்தை வாங்கி மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களும் இது நம்ம ஆளு படத்துக்கு எதிராக திரண்டுள்ளனர்.
வாலு படத்தைப் பற்றி டி.ஆர். கொடுத்த பில்ட் அப்பை நம்பி பெரிய தொகையைக் கொடுத்து அந்தப் படத்தை வாங்கியுள்ளனர்.
சிம்பு நடித்த போடா போடியைவிட மோசமான தோல்வியை சந்தித்தது வாலு.
இதனால் போட்ட முதலீடு மொத்தத்தையும் இழந்தனர் விநியோகஸ்தர்கள்.
எனவே தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இப்போது போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர்.
விநியோகஸ்தர்களின் பிரச்சனை காரணமாக, இது நம்ம ஆளு படத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் அதிர்ச்சியடைந்துள்ளது.