சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார்.
அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவையான கருத்துகளே மையமாக இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும்.
கடந்த வருடம் அவர் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியானது. இந்தப் படம் அபிமன்யூ என்ற பெரியரில் கன்னடத்திலும் வெளியானது. குழந்தைகளின் கல்வியும் அதன் முக்கியதுவத்தை குறித்து பேசியிருந்தது "ஜெய்ஹிந்த் 2". தமிழிலும் கன்னடத்திலும் இந்தப் படம் அர்ஜுனுக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்ததோடு பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியையும் பெற்றது.
தற்போது கர்நாடக மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த படத்துக்கான இரண்டாவது பரிசை அபிமன்யூ வென்றுள்ளது. இப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருந்த அர்ஜுன் இந்த விருதினைப் பெற இருக்கிறார்.