ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரன்பீர் கபூர் - கத்ரினா கைப்
பாலிவுட்டில் சமீப காலமாக அதிகம் பேசப்பட்ட காதல் ஜோடி ரன்பீர் கபூர் - கத்ரினா கைப் ஜோடி. வெக நாட்களாக தங்களின் காதலை வெளிப்படையாக மறுத்து வந்த இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் தங்களின் காதலை ஒப்புக் கொண்டனர். ஆனால் ஒப்புக் கொண்ட சில நாட்களிலேயே தங்களின் காதல் முறிவையும் அறிவித்துள்ளனர். சமீபத்திய விழாக்களிலும் தனியாகவே கலந்து கொள்ளும் இவர்கள், இந்த காதலர் தினத்தையும் தனியாகவே கொண்டாட உள்ளனர்.
வீராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா
சமுக வலைதளங்களிலும், பாலிவுட்டிலும் அதிக சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளான காதல் ஜோடி வீராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா தான். இவர்களது திருமண அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில், தான் சினிமாவில் கவனம் செலுத்தவே விரும்புவதாக அனுஷ்கா கூறியதால், கோஹ்லி கடும் கோபத்தில் இருக்கிறார். இருந்தும் காதலர் தினத்தில் சினிமாவில் பிஸியாக இருககிறார் அனுஷ்கா.
கரிஷ்மா கபூர் - சஞ்சய் கபூர்
காதல் திருமணம் செய்து கொண்ட கரிஷ்மா கபூர், சஞ்சய் கபூர் ஜோடி, தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்கர் கோர்ட் மூலம் விவாகரத்தும் பெற்று விட்டனர். இருந்தும் குழந்தைகள் யாருடன் இருப்பது என்பது பிரச்னை இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹிருத்திக் ரோஷன் - சுசானா கான்
2014 ல் மனைவி சுசானாவும், ஹிருத்திக்கும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட போதிலும் அவர் மறுத்து வரும் ஹிருத்திக், இதுவரை தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார்.