இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் படங்களின் வியாபாரம் என்றால் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக தான் லாபம் இருக்கும் என்பது தயாரிப்பாளர்கள் கருத்து. மகேஷ் பாபு தற்போது பிரம்மோற்சவம் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் விற்பனை எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. இருப்பினும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் சர்தார் படத்தின் விற்பனையோடு ஒப்பிடுகையில் பிரம்மோற்சவம் படத்தின் விற்பனை குறைவுதான் என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. சர்தார் படத்தை புதுமுக இயக்குனர் ரவீந்திர பாபி இயக்கி வருகின்றார். அண்மையில் இப்படத்தின் விநியோக உரிமையை இந்திரா பிலிம்ஸ் நிறுவனம் ரூ 21 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம். ஆனால் பிரம்மோற்சவம் படத்தை வாங்க ரூ15 கோடி முதல் ரூ 17 கோடி வரை மட்டுமே விநியோகஸ்தர்கள் விலை நிர்ணயித்துள்ளனர்.