வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மும்பை நடிகையான பூனம் பாஜ்வா தமிழில் பல படங்களில் நடித்து விட்டபோதும் இன்னமும் பேசப்படும் நடிகையாகவில்லை. அதோடு, சமீபத்தில் அவர் நடித்து வெளியான ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 படங்களில் ஏற்கனவே சில படங்களில் கிளுகிளுப்பான வேடங்களில் நடித்த மும்தாஜை நினைவு படுத்தும் வகையிலான வேடங்களில் நடித்திருந்தார். அதனால் அதையடுத்து அவர் சிலரிடத்தில் கதாநாயகி வாய்ப்புக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, அவருக்கு மீண்டும் கிளுகிளு வேடங்கள் கொடுக்கவே முன்வந்தார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து விட்டாராம் பூனம்பாஜ்வா.
அதேசமயம், சில அபிமானிகள், முன்பை விட இப்போது உடம்பு வெயிட் போட்டு விட்டது. அதனால் முதல் வேலையாக உடல் எடையை குறையுங்கள். இப்படி இருந்தால் அந்த மாதிரி வேடம்தான் தருவார்கள் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்களாம். அதனால் இதுவரை தனது உடம்பு விசயத்தில் யார் எந்த அட்வைஸ் கொடுத்தாலும் செவி சாய்க்காமல் இருந்து வந்த பூனம் பாஜ்வா, இப்படியே விட்டால் தன்னை அடுத்த மும்தாஜ் ஆக்கி விடுவார்கள் என்கிற அச்சம் ஏற்பட்டதை அடுத்து உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரமடைந்திருக்கிறாராம்.