பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில், போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. அந்த முதல் படத்திலேயே கதைக்கு தேவையான கிளாமரை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இப்போதுவரை கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், டைரக்டர் பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் நடித்தார் வரலட்சுமி. சில மாதங்களாக கரகாட்ட நடனத்தை பயின்று அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. என்றாலும், வரலட்சுமியின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. அதோடு, அதையடுத்து அவர் நடித்து வரும் நிபுணன் படத்தில் வெயிட்டான ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் வரலட்சுமி. நேற்றைய தினம் மம்மூட்டியுடன் நயன்தாரா நடித்துள்ள புதிய நியமம் படம் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து தான் மம்மூட்டியுடன் நடிக்கப் போகிற செய்தியை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் வரலட்சுமி. மேலும், தாரைத் தப்பட்டை படத்துக்குப்பிறகு கவனிக்கப்படும் நடிகையாகிவிட்ட வரலட்சுமி, அடுத்தபடியாக ஹீரோயின் இமேஜ் பற்றி கவலைப்படாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்காகவும் தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம்.