பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சிம்பு - வரலட்சுமி நடித்த 'போடா போடி' படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அதையடுத்து விஜய்சேதுபதி - நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதேப்போல் வணக்கம் சென்னை படத்தில் 'எங்கடி பொறந்தே...', என்னை அறிந்தால் படத்தில் 'அதாரு அதாரு...', நானும் ரவுடிதான் படத்தில் 'தங்கமே...' உள்பட பல படங்களில் பாடல்களும் எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில், நானும் ரவுடிதான் ஹிட்டுக்குப்பிறகு உடனடியாக தனது அடுத்த படத்தை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்கிரிப்ட் ஒர்க் வேலையில் சில மாதங்களாக ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும், அவரது அடுத்த படத்திலும் விஜயசேதுபதியே நாயகனாக நடிக்கயிருப்பதாக இப்போது இன்னொரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல், நானும் ரவுடிதான் படத்திற்கு இசையமைத்த அனிருத்தே விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கிறாராம். அந்த வகையில், அந்த படத்திற்காக விக்னேஷ்சிவன் எழுதியுள்ள சில பாடல்களுக்கு அனிருத் டியூன் அமைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.