ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் உறவினரான ரக்ஷன், திருட்டு ரெயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் நடிக்கும் 2வது படம் மானிடம். இதனை சின்னத்திரை நிகழ்ச்சி இயக்குனர் ஒய்.முனீஷ் இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் அட்சயப்ரியா நடிக்கிறார். ஏ.எஸ்.எம்.மூவீஸ் சார்பில் அசோக்குமார் தயாரிக்கிறார். ராம்ஜி இசை அமைக்கிறார், ரத்னவேலுவின் உதவியாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
வருகிற 22ந் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி 40 நாளில் ஒரே ஷெட்யூலில் முடிக்க இருக்கிறார்கள். படத்தின் பூஜை நேற்று நடந்தது. அப்போது இயக்குனர் ஒய்.முனீஷ் படம் பற்றி கூறியதாவது:
தமிழ்ச் சினிமாவில் பெரும்பாலான கதை, நாயகர்கள் சுற்றித் திரியும் சோம்பேறிகளாகவோ, வேலை வெட்டி இல்லாதவர்களாகவோதான் வருகிறார்கள். ஆனால் மானிடன் நாயகன் வேறுமாதிரி இருப்பான். 2020ல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறது,பிரச்சினையை சந்திக்கப் போகிறது. இப்போது நாம் வாழும் வாழ்க்கையின் விளைவுதான் அப்படி வர இருக்கிறது. அது யாருக்கானது ? என்றால் எல்லாருக்குமானதுதான். பிச்சைக்காரன் முதல் ஒபாமா வரை நிம்மதியாக வாழ எது தேவையோ அதைப்பற்றி சொல்லும் படம். அப்படி இருக்கும் பிரச்சினை என்ன என்று படத்தில் தெரியும்.
வருங்கால ஆபத்தைப் பற்றிக் கவலையுடன் எச்சரிக்கும் படமாக மானிடன் இருக்கும்.இது காதல், நகைச்சுவை, எல்லாமும் கலந்த சமூகப்பொறுப்புள்ள கதையாக இருக்கும். ஊத்துக் கோட்டை, சுருட்டப்பள்ளி ,சாலக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. என்கிறார் இயக்குனர் முனீஷ்.