ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாகுபலி பாத்திரத்திலும், அவரது மகனான ஷிவுடு பாத்திரத்திலும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கிறார். கம்பீரமான ராஜ பரம்பரையைச் சேர்ந்த கதாபாத்திரம் என்பதால் முதல் பாகத்திலேயே அதற்கேற்றவாறு எடை சற்றே கூட்டி நடித்திருந்தார்.
பாகுபலி' 2-ம் பாகத்தில் தற்போது நடித்து வரும் நடிகர் பிரபாஸ் தன் உடல் எடையை 150 கிலோவாக கூட்டியுள்ளார் என்பதே தற்போது வெளியாகி உள்ள தகவல். தற்போது 120 கிலோ எடையிருக்கிறாராம் பிரபாஸ். அது போதாது என்று இன்னும் 30 கிலோ எடை கூட்ட வேண்டும் என்று இயக்குநர் ராஜமௌலி பிரபாஸிடம் சொல்லி இருக்கிறாராம்.
அதாவது, இரண்டாம் பாகத்தில் 150 கிலோ எடையில் இன்னும் மிரட்டலாக இருக்க வேண்டும் என்று சொன்னாராம். எனவே, 2 பயிற்சியாளர்களையும், ஒரு டயடீஷியனையும் தன் கூடவே வைத்துக் கொண்டு, தன்னுடைய உடல் எடையை கூட்டுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம் பிரபாஸ். இதற்காக ஜிம்மில் தினமும் 5 மணி நேரத்தை செலவிடுகிறாராம் பிரபாஸ். அது மட்டுமல்ல, தினமும் 50 முட்டைகள், அரை கிலோ சிக்கன், பழங்கள், காய்கறிகள் என சாப்பிட்டு வருகிறாராம்.
இந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள எதுவுமே நம்புகிற மாதிரி இல்லையே?