ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஈகோ, யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களில் சிறிய கேரக்டர்களிலும், இரண்டாவது நாயகியாகவும் நடித்து வந்த அனஸ்வரா குமார், பட்டினப்பாக்கம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதில் மெட்ராஸ் கலையரசன் அவருக்கு ஜோடியாகவும், ஹீரோவாகவும் நடிக்கிறார். இவர்களுடன் யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், மதன்பாப், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா நடிக்கிறார்கள். முள்ளமூட்டில் புரொடக்ஷன் சார்பில் ரோகித் மேத்யூ தயாரிக்கிறார். இஷான் தேவ் இசை அமைக்கிறார், ராணா ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் ஜெயதேவ் இயக்குகிறார்.
நகரத்தையட்டி இருந்தாலும் பட்டினப்பாக்கத்து மக்கள் ஒரு கிராமிய மணத்தோடு வாழ்கிறவர்கள். அவர்களின் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையில் ஏற்படும் ஒரு தடையை அவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதும்தான் கதை. படப்பிடிப்புகள் முடிந்து படம் ரிலீசுக்கு ரெடியாகி விட்டது. பட்டினப்பாக்கம் ஹீரோயின் அந்தஸ்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அனஸ்வரா.