ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் கொடி. அரசியல் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒரு முக்கிய நாயகியாக திரிஷா நடித்து வருகிறார். இதற்கு முன்பு பெரும்பாலும பாசிட்டீவான ரோலில் நடித்துள்ள திரிஷா, இந்த படத்தில் நெகடீவ் கலந்த ஒரு வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள். மேலும், இதே படத்தில் இன்னொரு நாயகியாக அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி நடிப்பதாகத்தான இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.
அதனால் அவர் நடிக்கயிருந்த வேடத்தில் பிரேமம் பட நாயகிகளில் ஒருவரான மடோனா நடிப்பதாக கூறப்பட்டது. இவர்தான் விஜயசேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்போது ஷாமிலி நடிக்கயிருந்த வேடத்தில் மடோனா நடிக்கவில்லை. பிரேமம் படத்தின் இன்னொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக சொல்கிறார்கள். கதைப்படி அது சிறிய வேடம்தான் என்றாலும், கதைக்கு திருப்புமுனைதரக்கூடிய வேடம் என்பதால் அவர் கமிட்டாகியிருப்பதாக சொல்கிறார்கள்.