நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
காஞ்சனா படத்தில் கோவை சரளா- தேவதர்ஷிணியின் காம்பினேசனுக்கு அதிக காட்சிகள் கொடுத்திருந்தார் லாரன்ஸ். அப்படி அவர்கள் இருவரும் நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனதால் இப்போது தான் நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் அவர்களுக்கு கதையோடு கலந்த தனி காமெடி ட்ரேக்கே கொடுத்துள்ளாராம் லாரன்ஸ்.
குறிப்பாக, இதற்கு முன்பு அவர்கள் நடித்தில் இருந்து மாறுபட்டு இந்த படத்தில் எதிரும் புதிருமான வேடங்களை கொடுத்திருக்கிறாராம். தெலுங்கு ரீமேக்கான இந்த படத்தில் காமெடி காட்சிகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாம். அதனால் படம் ஆக்சன் கதையில் உருவாகியிருந்தாலும் கோவை சரளாவின் அதிரடி காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ரிலாக்சாக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம் லாரன்ஸ். மேலும், தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும்கூட காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டால் அன்றைய தினம் ஸ்பாட்டுக்கு சென்று கோவை சரளாவின் நடிப்பை கைதட்டி ரசித்து வருகிறாராம்.