‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்தால்தான் வரிவிலக்கு சலுகை வாங்க முடியும். எனவே யுஏ சான்றிதழ் கொடுத்தால் கூட தயாரிப்பாளர்கள் தயங்கும் சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் தனது 'எடாகி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் நடிகர் சித்தார்த் முதன் முதலாக தயாரித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களைப்போல் வருத்தப்பட்டு பாரம் சுமக்காமல், ''ரொம்ப சந்தோஷம், சுத்தமான, அமைதியான, தெய்வீகமான 'U/A' கிடைத்ததற்கு நன்றி'' என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.
நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தை குறும்பட இயக்குனர் தீரஜ் வைத்தி என்பவர் எழுதி, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சித்தார்த்துடன் ராதாரவி, அவினாஷ், ரகுதேவன், சனந்த், ஆர்.மகேந்திரன், எம்.ஜி.சாய் தீனா, கே.பகவதி பெருமாள், நாகா, பிபின், ஷரத், ஆர்.எஸ்.சிவாஜி, விஜய்முத்து, பிரவீன், ஜாஸ்மின் பாஸின் ஆகியோர் நடித்துள்ளனர்.
'கதாநாயகி இல்லாமல் மூன்று இளைஞர்களை சுற்றிச் சுழலும் வித்தியாசமான ஒரு கதை அமைப்பைக் கொண்டது இப்படம். எனவே இப்படத்திற்கு சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் 'யு/ஏ' சர்டிஃபிகேட் வழங்கியிருக்கிறார்கள். 'ஜில் ஜங் ஜக்' படத்தில் இடம்பெறும் ஷூட் த கிழி என்ற பாடல் ஆபாசமான பாடலைப்போன்ற தோற்றம் ஏற்படுத்துவதால் யுஏ கொடுக்கப்பட்டதாக தணிக்கை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் அடிபடுகிறது.