மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சன்னி லியோன் என்றால் சர்ச்சை, சர்சை என்றால் சன்னி லியோன் என்கிற அளவுக்கு நீலப்பட நடிகை சன்னி, மீது வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கிறது. தற்போது அவர் மீது புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சன்னி லியோன் நடித்துள்ள மஸ்திஜாதே என்ற இந்திப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் சன்னி லியோனும், ஹீரோ விர்தாசும் ஒரு கோவில் முன் நின்று 'காண்டம்' விளம்பரத்தில் நடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சி என்று கூறி டில்லியை சேர்ந்த வக்கில் கவ்ரவ் என்பவர் டில்லி போலீசில் புகார் செய்தார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், சன்னி லியோன் மற்றும் விர்தாஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனது ஆபாச படங்களையும், வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டதாக சமீபத்தில் மும்பை போலீசில் ஒரு பெண் புகார் அளித்ததும் இதன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.