Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெறியின் உலக சாதனை, உண்மையா.?

11 பிப், 2016 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Theri-teaser-made-world-record.?

தெறி படத்தின் டீசர் கடந்த 5ம் தேதியன்று நள்ளிரவு வெளியானது. வெளியான நாள் முதலே தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்தியத் திரையுலகில் இதுவரை எந்த டீசரும் தொடாத ஒரு லைக் சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது. இதுவரை தெறி டீசருக்கு 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.


லைக்குகளைப் பொறுத்தவரையில் தெறி டீசர் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு மீம் பரவியது. அதில் அவஞ்சர் திரைப்படத்தின் டீசர் முதலிடத்திலும், ஜுராசிக் வேர்ல்டு டீசர் இரண்டாவது இடத்திலும், தெறி டீசர் மூன்றாவது இடத்திலும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மைதானா என நாம் அலசிய போது கிடைத்த தகவல்கள்.


அவஞ்சர்ஸ் - ஏஜ் ஆப் அல்ட்ரான்ஸ் டீசர் கடந்த 2014ம் ஆண்டு யு டியூபில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை இதுவரை 7 கோடியே 84 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த டீசர் பெற்றுள்ளது.


ஜுராசிக் வேர்ல்டு டிரைலர் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதை இதுவரை 7 கோடியே 93 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.


ஆனால், தெறி டீசரை இதுவரை 63 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்தான் பார்த்துள்ளனர். அதற்குள் லைக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அவஞ்சர்ஸ், ஜுராசிக் வேர்ல்டு ஆகியவற்றின் டீசர், டிரைலர் பார்வையாளர்கள் 7 கோடியைத் தாண்டியுள்ளனர். ஆனால், தெறி டீசரின் பார்வையாளர்கள் 63 லட்சத்தைத்தான் தாண்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேசமயம் டீசர், டிரைலர் என்ற விதத்தில் தெறி டீசரின் சாதனையைக் கவனிக்கும் அதே சமயத்தில் கொல வெறியின் சாதனையையும் நாம் மறந்துவிட முடியாது. கொல வெறி பாடல் 2011ல் வெளியானது. இதுவரை 10 கோடியே 25 லட்சம் பேர் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 95 ஆயிரம் லைக்குகள் இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in