ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாதவன், ரித்விகாசிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கும் படம் இறுதிச்சுற்று. இந்தப் படத்திற்கும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் நெருக்கம் உண்டு. படத்தின் ஹீரோ மாதவன் மணிரத்தினத்தால் அலைபாயுதே படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர். இயக்குனர் சுதா மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இறுதிசுற்று பற்றி மணிரத்னம் கூறியதாவது: குத்துச் சண்டை பற்றி அதுவும் பெண் வீராங்கணை பற்றி வந்திருக்கும் படம். தமிழில் புதிய முயற்சி, பாராட்டப்பட வேண்டிய முயற்சி. மாதவனை நான் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே இந்தியில் நடித்திருக்கிறார். அவருக்கென்று தனி பாதை இருக்கிறது. அவர் தமிழில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். படத்தின் நாயகி ரித்திகாசிங், இயக்குனர் சுதாவின் கேரக்டர் மாதிரியே இருக்கிறார். சுதா என்னிடம் பயின்றவர் என்றாலும் கதை சொல்வதில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார். பெண் இயக்குனர்களில் இது அபூர்வமான விஷயம். சுதா மிகவும் திறமையானவர். அவரிடமிருந்து இன்றும் நிறைய எதிர்பார்க்கலாம். என்கிறார் மணிரத்னம்.