சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
ஜீவா, ஹன்சிகா மோத்வானி, சிபிராஜ் நடிக்கும் படம் போக்கிரிராஜா. புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். அஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தை காஸ்மோ வில்லேஜ் நிறுவனத்தின் சார்பில் சிவகுமார் வெளியிடுகிறார்.
படத்தின் கதை இதுதான்: ஜீவாவும், ஹன்சிகாவும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்க்கிறவர்கள். சின்ன சின்ன மோதலைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் காதல் வருகிறது. ஜீவாவின் நண்பர் சிபிராஜ். படிக்காதவர் சின்ன சின்ன ரவுடித்தனங்கள் செய்து உடான்சிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறவர். சிபிராஜால் ஜீவா, ஹன்சிகா காதல் உடைகிறது. ஹன்சிகாவால் ஜீவா, சிபிராஜ் நட்பு உடைகிறது. ஒன்றாக இருந்து மூவரும் ஆளுக்கு ஒரு திசையாக பிரிகிறார்கள். இதுவரை காமெடியாக கடந்து வந்த படம் இண்டர்வெல் பிளாக்கில் பிரிகிறது.
ஜீவா, ஹன்சிகா பிரிந்ததற்கு சிபிராஜ் காரணமல்ல, ஜீவா, சிபிராஜ் பிரிந்ததற்கு ஹன்சிகா காரணமல்ல எல்லாவற்றுக்குமே ஒரு பேண்டசி சமாச்சாரம்தான் காரணம். அது என்ன என்பதுதான் சஸ்பென்ஸ். முதல் பாதியை காமெடியாகவும், மறுபாதியை பேண்டசி கலந்த எண்டர்டெயின்மெண்டாகவும் கொண்டு செல்கிறார்கள். பேண்டசி சமாச்சாரத்திற்காக நிறைய கிராபிக்ஸ் வேலைகள் செய்திருக்கிறார்கள்.
"பொதுவாவாக பேண்டசி சமாச்சரங்கள் பிரமாண்டத்துக்குத்தான் பயன்படுத்தப்படம். இதில் காதலுக்கும் காமெடிக்கும் பயன்படுத்தியிருக்கிறோம். யதார்த்தமான வாழ்க்கையில் பேண்டசியை எப்படி இணைக்கிறோம் என்பதில்தான் படத்தின் சுவாரஸ்யமே இருக்கிறது" என்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா.