ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி நடித்துள்ள படம் சவுகார்பேட்டை. ஹாரர் கதையில் தயாராகியுள்ள இந்த படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். இப்படம் இம்மாதம் 26-ந்தேதி திரைக்கு வருகிறது. அதேநாளில் தெலுங்கில் சிவகங்கா என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. இதுவரை எத்தனையோ பேய் படங்கள் வந்திருந்தபோதும் இந்த படம் அந்த படங்களில் இருந்து மாறுபட்ட அதிரடி படமாக இருக்கும் என்கிறார்கள். அதோடு இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஜான் பீட்டர் வித்தியாசமான இசைக்கருவிகளை பயன்படுத்தி மிரட்டலான பின்னணி இசையமைத்திருக்கிறாராம்.
அதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, இந்த படத்தில் பேயும் பேயும் டூயட் பாடும் ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலில் பல பேய்கள் அவர்களுடன் நடனமாடுவது போன்ற காட்சியுள்ளது. அதில் இதற்கு முந்தைய எந்த படங்களின் சாயலும் இல்லாத வகையில் இசையமைத்திருக்கிறேன். அதோடு, இந்த படத்தில் பேய்க்கு தீம் மியூசிக் போட்டிருக்கிறேன். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதிதாக இருக்கும். அப்படி நான்கு தீம் மியூசிக் உள்ளது.
அதோடு, பயம் பயம் என்றொரு பாடல் உள்ளது. இதில் பேயே பயப்படுவது போன்று படமாக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பாடலில் பழிவாங்கத் துடிக்கும் பேய்களின் ஆவேச நடனம் இடம்பெற்றுள்ளது. அதில் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி ஆடிய நடனம் படம் பார்க்கிறவர்களை பதற வைத்து விடும். அந்த அளவுக்கு நடனம் இருக்கிறது. அதனால் அதை உணர்ந்து நானும் பின்னணி இசை கொடுத்துள்ளேன் என்கிறார் ஜான்பீட்டர்.