நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இனியா நடித்து, மிகவும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்கள், தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்ததால், அவருக்கு, ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை, அழுத்தமாகவே குத்தி, வேடிக்கை பார்க்கிறது கோலிவுட். இதனால், துவண்டு போயிருந்த இனியா, தற்போது, பொட்டு உள்ளிட்ட இரண்டு படங்கள் கைவசம் உள்ளதால், சற்றே ஆறுதலாக இருக்கிறார். பொட்டு படத்தில், மணீஷா, நமீதா என, மேலும், இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், ஹீரோ பரத்துக்கு, இனியா தான், பிரதான ஜோடியாம். இதில் நடிப்பதற்கும், அவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதனால், 'இந்த படத்துக்கு பின், என் திரையுலக வாழ்வில் வசந்தம் வீசும். கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவேன்' என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.